1 இத்தாலியின் சர்வாதாகாரி முசோலினி எத்தியோப்பாமீது
படையெடுப்பதும்,அந்நாடு அவன் கைகளில் வீழ்வதும், தம்நாட்டு மக்களாலேயே
அவன் துப்பப்பட்டு வீழ்ச்சியடைவதும்
2. ஓர் ஆஸ்திரிய இளைங்கன் ஜெர்மனியின் கொடுங்கோலனாக எழுச்சியுற்று 2ஆம்
உலகப்போருக்கு காரணமாவதும், அமெரிக்கா அப் போரில் இறங்குவதும்
முன்னறவிக்கப் பட்டு ஹிட்லர் மூலமாக நிறைவேறினது.
3. பாசிசம்,நாஜிசம்,கம்யூனிஷம் மூன்றும் தோன்றி கம்யூனிஷம் மட்டும்
நிலைநிற்பதும் அதினால் ரஷ்யா வல்லரசாவதை கவனிக்குமாறு எச்சரித்தது.
இவைகள் தற்சமையம் நிறைவேறி வரலாறாகியிருக்கிறது.
தற்சமயம் நிகழ்வில் உள்ளவைகள் 4. 2ஆம் போருக்குப்பின் விஞ்ஞானம்
குறிப்பிடும் படியாக வளர்ச்சியடைவதும் அதன்பயனாக ஓட்டுனரே தேவைப்படாத
திருப்புவிசைச்சக்கரம் இல்லாமலேயே இயங்கும் முட்டை வடிவக்கார்கள்
அமெரிக்காவில் தொலைஇயக்கியால் இயக்கப்பட்டு பவனி வருவதும். அதில்
பயனித்தவர்கள் CHECKERS போன்ற ஒரு விளையாட்டில் கவனம் கொண்டிருப்பதும்
போல் காணப்பட்டது. இது தற்சமயம்GPS-தொழில்நுட்பத்தினால்
சாத்தியமாகியுள்ளது.
5. பெண்கள் ஓட்டுரிமை பெறுவதும், நல்லொழுக்கம்
சீரழிவதும்,ஆடைக்குறைப்பினால் ஏறத்தாழ நிர்வாணமாக திரிவதையும் கண்டார்.
இனி நிறைவேற வேண்டியவைகள்
6. அமெரிக்க தேசத்தில் அழகான ஆனால் வஞ்சகமும்,கொடூரமுமுள்ள ஓர் பெண்
எழும்பி மிகுந்த அதிகாரமுள்ளவளாகி விவரிக்கவியலா கடின தன்மையோடு ஆதிக்கம்
செலுத்துவதைக் கண்டார். ஒரு வேளை அது ரோமன் கத்தோலிக்க சபை அமெரிக்க
தேசத்தில் செல்வாக்கு அடைவதைக் குறிக்ககூடும். (அமெரிக்கத் துனை அதிபர்
பதவிக்காக பரிந்துரைப்பில் இருக்கும் சாரா பாலின்-ஐ கவனிக்கவும்)
7.கடைசியாக இன்னும் ஒரு முறை பார்க்கும் படி அச்சத்தம் கூறினது
தீர்க்கதரிசி திரும்பிபார்த்தபோது ஓர் பெரிய வெடிச்சத்தம் ஏற்பட்டு
அமெரிக்கா புகைக்காடாக மாறியிருந்தது.கண்ணுக்கெட்டிய தூரம் வரை
குழிகளும்,புகையும் குப்பைகளுமே இருந்ததுமேயன்றி மனிதர் யாரும் அங்கு
காணப்பட வில்லை. தரிசனம் மறைந்தது.