"இந்த இரகசியம் பெரியது. நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன்." (எபேசியர் 5:32)
"நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடையஎலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம்." (எபேசியர் 5:30)
"புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள். அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்,
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்." (எபேசியர் 5:25-27)
இதுதான் பரம இரகசியம் தேவன் (ஏலோஹீம்) தனிமையில் வாழ்ந்தாலும் அவருக்குள்ளாக சபையாகிய மணவாட்டி மறைந்திருந்தாள் இது அவர் மனுஷனை சிருஷ்டிக்கும் போது ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்து பின் ஆணிலிருந்து பெண்ணை பிரித்ததிலிருந்து தேவ சாயல் மற்றும் ரூபமானது ஆணும் பெண்ணுமாயிருப்பதான (அதாவது ஆணிற்குள் பெண் மறைந்திருக்கும் விதமாய்) உண்மையை நமக்குப் புலப்படுத்தும்
"பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். "தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்." (ஆதியாகமம் 1:26-27) எனவே இரகசியத்தின் விவரமாவது தேவ சாயல் என்பது ஆவியும் மணவாட்டியும் (வெளி 22:17) அஃதாவது கிறிஸ்துவும் மணவாட்டியும் ஆகும் 1கொரி1:13 (கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா?) ; 6:17 இதுவே பூர்வத்தில் மறைக்கப் பட்டு இப்பொழுது பரிசுத்த ஆவியானவர் தம்முடையவர்களுக்கு வெளிப்படுத்தி அவர்களை தம்மோடு ஒரே சரீரமாக ஐக்கியப்படுத்திக் கொள்கிறார் இதுவே அந்த பெரிய இரகசியம் எனவே நாம் அவருடைய பாகம் என விசுவாசிப்போமெனில் அவர் வாழ்ந்த விதமாய் பரிசுத்தமாய் வாழ்ந்து மாயக்காரரை எதிர்த்து பொய்யான சபைக்கு செல்லாமல் வார்த்தையை விசுவாசித்து உலகத்தை வெறுத்து மறுபடியும் பிறந்து தேவனுக்குள் மறைந்து உத்தம ஜீவியம் செய்வோமாக. ஆமென்.
No comments:
Post a Comment